ரயில் நிலையத்தில் புதிதாக துவங்கப்பட்ட பேட்டரி கார் சேவை..!
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் புதிதாக துவங்கப்பட்ட பேட்டரி கார் சேவைக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் பேட்டரி கார் சேவை துவங்கப்பட்டுள்ளது.
இதற்கு மாற்று திறனாளிகள் முதியோர்களும் வரவேற்பு அளித்துள்ளனர். பத்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வயதானவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளித்து மற்றவர்களுக்கு கட்டணம் நிர்ணயித்திருக்கலாம் என்றும் பயணிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.






