ஆதார் அட்டை: அதிகாரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
வங்கதேசம், மியான்மர், பாகிஸ்தானை சேர்ந்த அகதிகள், இந்தியாவில் ஊடுருவி ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்று இங்கேயே தங்குவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இதை கவனத்தில் கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம், அகதிகள் தொடர்பான தரவுகளில் அவர்கள் பெயர்கள் உள்ளனவா என்று ஆய்வு செய்தபிறகு அடையாள அட்டைகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.






