--- --:--:-- --

காதலை ஏற்றுக் கொள்ள மறுத்த இளம் பெண்ணுக்கு சரமாரியாக கத்தி குத்து..!

1

கோவை சுந்தராபுரம் பகுதியில் காதலிக்க மறுத்த இளம் பெண்ணை கத்தியால் குத்தி விட்டு தலைமறைவான கல்லூரி மாணவனை பிடிக்க இரண்டு தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

 

குனியமுத்துறை சேர்ந்த ஸ்ரீ ராம் பிள்ளையார்புரம் பகுதியில் சேர்ந்த 19 வயதான பெண் ஒருவரை ஒருதலையாக காதலிக்க வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண் பணிபுரியும் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சென்று ஸ்வேதா தன்னை காதலிக்கும் படி வலியுறுத்தியுள்ளார்.

 

இதற்கு மறுப்பு தெரிவித்ததால் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த பெண்ணை தரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றார். இதில் பலத்த காயம் அடைந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon