மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் இடி தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு..!
அரியலூர் அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் இடிதாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஒருவர் படுகாயமடைந்தார். கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணும், செல்வராஜ் என்பவரும் அந்த பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்தனர்.
அப்போது இடி தாக்கியதில் மாடு மேய்த்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயம் அடைந்த செல்வராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





