50 வயதை தாண்டி யாரும் உயிர் வாழாத கிராமம்!
ஜார்கண்ட் மாநிலத்தில் புளோரைடு கலந்த குடிநீரால் சில குறிப்பிட்ட கிராம மக்கள் குறைந்த வயதிலேயே மரணம் அடையும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஜார்கண்ட் மாநிலம் வலம்பு மாவட்டத்திலுள்ள சுக்ரு என்ற கிராமத்தில் தான் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது.
இந்த கிராமத்தில் அதிகபட்சமாக 50 வயதைத் தாண்டி யாரும் உயிர் வாழ்வதில்லை என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். குடிநீரில் அதிக அளவு புளோரைடு கலந்து இருப்பதே இதற்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் அந்த கிராம மக்களுக்கு பல் மற்றும் எலும்புகளில் பாதிப்பு ஏற்படுகிறது. சுக்ரு கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறைந்த வயதில் வாழ்க்கையை பறி கொடுப்பதால் அச்சமடைந்துள்ள சுக்ரு கிராம மக்கள் தங்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.





