--- --:--:-- --

‘மரம் வளருங்க..!’- ஒரு மாற்றுத்திறனாளியில் வியக்கவைத்த விழிப்புணர்வு பயணம்!

1

மாசற்ற காற்றை சுவாசிக்க மக்கள் மரம் வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மிதிவண்டி பயணம் மேற்கொண்டுள்ள மாற்றுத் திறனாளி இளைஞர் தர்மபுரியை சென்றடைந்தார்.

 

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற பட்டதாரி இளைஞர் கன்னியாகுமரி முதல் சென்னை வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 13ஆம் தேதி கன்னியாகுமரியில் தனது பயணத்தை தொடங்கிய மணிகண்டன் நெல்லை, திண்டுக்கல், சேலம் வழியாக தர்மபுரி மாவட்டம் அரூர் சென்றடைந்துள்ளார்.

 

பயணத்தின்போது நதிநீர் இணைப்பு, மழைநீர் சேகரிப்பு, மரக்கன்று நடுதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் துண்டு பிரசுரங்களையும் மக்களுக்கு வழங்கி வருகிறார். தனது பயணத்தை ஜனவரி ஒன்றாம் தேதி சென்னையில் முதல்வரை சந்தித்து நிறைவு செய்ய உள்ளார்.

Leave a Reply

Right Menu Icon