கல்லூரியில் படியில் இருந்து கீழே விழுந்த மாணவி பல் உடைந்து உயிரிழப்பு.!
சென்னை வேப்பேரியில் இயங்கிவரும் குரு ஸ்ரீ சாந்தி விஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில் பிகாம் மாணவி உயிரிழந்துள்ளார். கல்லூரியில் நான்காவது தளத்தில் படி ஏறிக்கொண்டிருந்த மாணவி மயங்கி விழுந்து மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதில் பல் உடைபட்டு சிறிதளவு ரத்தம் வெளியேறி இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருபத்தொரு வயது மாணவி திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சவுகார் பேட்டையை சேர்ந்த தொழிலதிபரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.





