6 வயது சிறுமியை கடித்து குதறிய தெரு நாய்..!
தெலுங்கானாவில் வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுமியை தெரு நாய் கடிக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சிறுமி வீட்டில் முன்பாக விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது அந்த வழியாக வந்த தெரு நாய் ஒன்று திடீரென சிறுமியை கடித்து குதறியது. அருகில் நின்றிருந்த பெண் சிறுமியை தூக்க முயன்ற பொழுதும் விடாமல் புரட்டி புரட்டி கடித்து குதறுகிறது.
நாயை விரட்டி அந்த சிறுமியை மீட்டனர். இதில் படுகாயம் அடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.





