வீட்டுக்குள் புகுந்து ஆறடி நீள பாம்பு..!
சென்னை கொளத்தூர் பகுதியில் கதவை திறந்து உள்ளே தூங்கியதால் ஆறடி நீளமுள்ள சாரை பாம்பு வீட்டுக்குள் புகுந்தது.
திருப்பதி தங்கவேல் தெருவை சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவரது வீட்டின் கதவு வழியாக உள்ளே நுழைந்த சாரைப்பாம்பு உஷ் உஷ் என சத்தமிட்டபடி பொருட்களை கீழே தள்ளியதால் வீட்டை விட்டு வெளியே வந்து கதவைத் தாளிட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு துறையினர் பாம்பை பிடித்து வனப் பகுதியில் ஒப்படைத்தனர்.





