பைக் இஎம்ஐ கட்ட தவறிய நபரை தரக்குறைவாக பேசிய தனியார் ஏஜென்சி ஊழியர்..!
சென்னையில் பைக் இஎம்ஐ கட்ட தவறிய நபரை தனியார் ஏஜென்சி ஊழியர்கள் தரக்குறைவாக பேசியது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராமாபுரத்தில் வசித்து வருபவர் பிரகாஷ்.
இவர் தவணையில் பைக் வாங்கிய நிலையில் மூன்று பேர் அவரை வழிமறித்து இருசக்கர வாகனத்தை வலுக்கட்டாயமாக பிடுங்கி சென்றுள்ளனர். நீங்கள் யார் என்னுடைய வண்டியை ஏன் எடுத்துச் செல்கிறீர்கள் என கேட்டதற்கு நீங்கள் மூன்று மாதமாக தவணை கட்டாததால் வாகனத்தை எடுத்து செல்கிறோம் என்று கூறுகின்றனர்.
ஆனால் அவர்கள் எந்த ஏஜென்சியை சேர்ந்தவர்கள் என தெரியாததால் பிரகாஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்களில் ஒருவர் பைக் உரிமையாளரை தரக்குறைவாக பேசிய போலீசார் ரோந்து விசாரணையில் அவர் மாதத் தவணை கட்டாதால் அந்த பகுதியைச் சேர்ந்த தனியார் ஏஜென்சி ஓட்டுனர் பைக்கை கொண்டு சென்றது தெரிய வந்தது.





