ஓடும் பேருந்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபர்..!
திருப்பூர் இடுவாய் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது 8 வயது குழந்தையுடன் கேரளாவில் நடைபெற்ற தோழியின் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் திருப்பூர் திரும்பினர்.
அப்பொழுது பேருந்தின் பின் இரு கையில் பயணித்த சகபயணி ஒருவர் இவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். முதலில் எச்சரித்த நிலையில் அந்த நபர் தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த அந்த பெண் பேருந்தில் நடத்துனரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சக பயணிகள் அந்த நபரை பிடித்து தாக்க துவங்கியுள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்து அந்த நபரை மீட்ட நடத்துனர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





