--- --:--:-- --

ஹைட்ரஜன் பலூனில் 2 நாட்களாக கீழே வர முடியாமல் தவித்த நபர்..!

9

ஹைட்ரஜன் பலூனை பயன்படுத்தி மரங்களில் உள்ள விதைகளை பறித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அதே பகுதியில் 120 கிலோமீட்டர் பரந்து இரண்டு நாட்கள் கழித்து உயிருடன் தரையிறங்கிய சுவாரசியமான சம்பவம் ஒன்று சீனாவில் நடந்துள்ளது.

 

வடகிழக்கு சீனாவில் உள்ள மாகாணத்தில் வசித்து வரும் ஒருவர் அங்குள்ள ஒரு காட்டுப் பகுதியில் ஹைட்ரஜன் பலூனை பயன்படுத்தி பைன் மரங்களில் உள்ள விதைகளை சேகரிப்பது இவருடைய வழக்கமாகும்.

 

சிறிது நாட்களுக்கு முன்பு இவரும் இவரின் நண்பரான மற்றொரு நபரும் அந்த பலூனில் வழக்கம்போல சென்று இரண்டு பேரும் விதைகளை சேகரித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த அந்த பலூன் அறுத்து கொண்டு வானில் பறக்கத் தொடங்கியதும் கட்டுப்பாடின்றி பறப்பதை பார்த்த உடனே சுதாரித்துக் கொண்ட அந்த கூட்டாளி பலூனில் இருந்து கீழே குதித்து எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பியுள்ளார்.

 

அவர் மட்டும் தனியாக வானத்தில் பறப்பது சென்றுவிட்டார். அதிர்ஷ்டவசமாக அவர் தன் செல்போனை வைத்துக் கொண்டுள்ளார். அடுத்தநாள் காலையில் அவரை செல்போனில் தொடர்புகொண்டு அவருடன் எவ்வாறு தரையிறங்குவது என்பதைப் பற்றி அவருக்கு போனிலேயே விளக்கம் கூறினார்களாம்.

 

மீட்புக் குழுவின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டவர் இரண்டு நாட்கள் கழித்துதான் தரையிறங்கினார். அவ்வாறு தரையிறங்கும் போது அவர் கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் தூரம் பலூனில் பறந்து இருந்தார் எனவும் கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon