--- --:--:-- --

பக்கத்து வீட்டுக்காரரின் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த நபர்..!

9

சென்னை திருவொற்றியூரில் அண்டை வீட்டாரின் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து சிசிடிவி ஆதாரங்களுடன் புகார் அளித்தும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

திருவொற்றியூரை சேர்ந்த ஒருவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களது குடும்பத்தினர் அவதிப்பட்டு வந்த நிலையில் உடல்நல பாதிப்பிற்கான காரணம் குறித்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

 

அவர்கள் வீட்டுக்குள்ள குடிநீர் தொட்டியில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த எல்லப்பன் என்பவர் மலத்தை கலந்தது தெரியவந்தது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.

 

இதனால் ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

Right Menu Icon