கோயிலில் தூங்கிய பால் வியாபாரி தலையில் கல்லை போட்டு கொலை..!
நள்ளிரவில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட இருவரை சமாதானப்படுத்திய பால் வியாபாரி தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகில் உள்ள சித்தோடு கிராமத்தை சேர்ந்த பால் வியாபாரி சேட்டு அதிகாலை நேரத்தில் பால் கறப்பதால் அங்குள்ள நாகாத்தம்மன் கோயிலில் படுத்து உறங்குவது வழக்கம் எனக் கூறப்படுகிறது.
சிவகுமார் சிவசங்கர் ஆகியோர் மது போதையில் கோயில் அருகே தகராறு செய்த பொழுது அவர்களை சேர்த்து சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளார். சிறிது நேரம் கழித்து மதுபோதையில் அங்கு வந்த சிவசங்கர், சேட்டின் மீது அருகில் இருந்த கல்லை தூக்கி தலையில் போட்டதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்து அதே இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பெயரில் வந்த ஆரணி போலீசார் ஏரியின் நடுவில் முட்புதருக்குள் பதுங்கியிருந்த சிவசங்கரை கைது செய்தனர்.





