காதலித்து ஏமாற்றிய காதலன்..கடைசி நொடியில் காதலி கொடுத்த ஷாக்..!
பண்ருட்டி அருகே ஒன்பது ஆண்டுகள் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருந்த இளைஞருக்கு போலீசார் முன்னிலையில் காதலியுடன் திருமணம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் வெள்ளைக்கரை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த பட்டதாரி பெண் தீபா என்பவரை 9 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ஜெயராஜின் பெற்றோர்கள் அவசர அவசரமாக ஜெயராஜிற்கு வேறொரு பெண்ணை பார்த்து நிச்சயம் செய்துள்ளனர்.
இது குறித்து காதலி தீபா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெயராஜை காவல் நிலையம் அழைத்து வந்து இருவரின் சம்மதத்துடன் திருமணம் நடத்தி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.





