உத்தரபிரதேசத்துக்கு ஒரு நியாயம்.. தமிழ்நாட்டுக்கு ஒரு நியாயமா எனக் கேட்ட உதயநிதி..!
இந்த விவகாரத்தில் மத்திய அரசை தமிழக அமைச்சர் உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார். ஐந்து ஆண்டுகளில் 6 லட்சம் கோடி வரி விடுத்த தமிழகத்திற்கு மத்திய அரசு வரிகள் வரி பகிர்வாக 1.58 லட்சம் கோடி மட்டுமே திருப்பி கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் 3.43 லட்சம் வரி கட்டிய உத்தரப் பிரதேசத்திற்கு 7 லட்சம் கோடி கொடுத்துள்ளதாக அமைச்சர் உதயநிதி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய பாஜக ஆட்சியில் கடைசி காலத்திலாவது தமிழகத்திற்கு சேர வேண்டிய நியாயமான நிதி பகிர்வை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளனர்.





