வீட்டின் பிரிட்ஜை திறந்து பார்த்தபொழுது ஐந்து வயது சிறுமி மரணம்..!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே மின்சாரம் பாய்ந்து ஐந்து வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நந்தவனம் நேதாஜி தெருவை சேர்ந்த தம்பதி கௌதம் – பிரியா. வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியை திறந்து உள்ளார். அப்பொழுது எதிர்பார்த்த விதமாக மின்சாரம் பாய்ந்து சிறுமி மயங்கி விழுந்தார்.
சிறுமியை ஆவடி அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர். சிறுமி ஏற்கனவே உயிரிழந்தது பரிசோதனையில் தெரியவந்தது. ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






