உயிரிழந்த கோவில் காளைக்கு ஊரே திரண்டு இறுதி அஞ்சலி
சிவகங்கை அருகே உயிரிழந்த கோவில் காளைக்கு ஊரே திரண்டு இறுதி அஞ்சலி செலுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் கிராமத்தில் உள்ள முனீஸ்வரர் கோவில் காளை உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.
சகமனிதன் இறந்தால் இறுதி அஞ்சலி செலுத்துவது போல இந்த கோவில் காளைக்கு மாலைகளை அணிவித்து அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தினர். அன்போடு வளர்த்து வந்த காளைக்கு கரகாட்டம் மற்றும் சிலம்பாட்டத்துடன் வாணவேடிக்கைகள் உடனும், இறுதி ஊர்வலம் நடத்தி அமர்க்களம் நடத்தினார்.
உயிரிழந்த கோவில் காளைக்கு ஊரே திரண்டு இறுதி அஞ்சலி
இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.






