--- --:--:-- --

குடிபோதையில் உறங்கிய அரசு பள்ளி தங்கும் விடுதி சமையலர்

6

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அரசு பள்ளி தங்கும் விடுதி சமையலர் குடிபோதையில் உறங்குவதால் மாணவர்களே சமைத்து சாப்பிட வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. சிங்காரப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்றுவரும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான தங்கும் விடுதியில் 75 க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.

 

நேற்று வழக்கம் போல மதிய உணவு சாப்பிட மாணவர்கள் சென்ற போது விடுதியில் உணவு இல்லாமல் இருந்தது. சமையலர் முனிராஜ் என்பவர் உணவுகளை தயார் செய்யாமல் குடிபோதையில் அருகில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலையில், மற்றொரு சமையலரும் விடுமுறை எடுத்துக் கொண்டதால் மாணவர்கள் உணவின்றி பசியில் தவித்தனர்.

 

பின்னர் அவர்களே சமைத்து சாப்பிட்ட நிலையில் விடுதி காப்பாளர் மற்றும் சமையலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon