--- --:--:-- --

மெரினா கடற்கரையை திறப்பது தொடர்பாக டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடிவு எடுக்கப்படும்..!

6

மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பது தொடர்பாக டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

சென்னை மெரினா கடற்கரையில் மீன் கடைகளை முறைப்படுத்துவதாகவும், கடற்கரையை தூய்மைப்படுத்த தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் ரமேஷ் அமர்வில் நடைபெற்று வருகிறது.

 

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப் பட்டு திரையரங்குகள் திறக்கப் பட்டிருக்கும் நிலையில் மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பதில் தாமதம் ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இந்த விஷயத்தில் அரசு முடிவு எடுக்காவிட்டால் நீதிமன்றம் உத்தரவிட எச்சரித்தனர்.

 

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நவம்பர் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பது தொடர்பாக டிசம்பர் முதல் வாரத்திற்கு முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டிசம்பர் முதல் வாரத்திற்குள் அரசு முடிவு எடுக்காவிட்டால் நீதிமன்றமே உரிய உத்தரவை பிறப்பிக்கும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon