நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த தம்பதி..கடித்து குதறிய நாய்..!
சென்னை சூளைமேட்டில் தனியார் நிறுவன ஊழியர் சுரேஷ் மற்றும் அவரது மனைவியை தெருநாய்கள் கடித்து குதறியது. இருவருக்கும் தொடை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. முதலில் நீலாவை கடித்த நாயை சுரேஷ் விரட்டியதையடுத்து அவரையும் நாய் கடித்ததால் கணவன், மனைவி இருவரும் அலறியுள்ளனர்.
அருகில் இருந்தவர்கள் நாயை அடித்து விரட்டிவிட்டு இருவரையும் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சூழலில் காவல் நிலைய போலீசார் தெரு நாயை பராமரித்து வந்த மல்லிகா என்பவரிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.





