மதம் மாறிய பெண்ணுக்கு கத்தி குத்து..!
உத்தரபிரதேச மாநிலம் ராம்கூரில் மதம் மாறி திருமணம் செய்ய முயன்ற இளம் பெண் சில ரவுடிகளால் கத்தியால் குத்தப்பட்டார். இதன் காட்சி வைரலாக பரவியதை எடுத்து காவல்துறையினர் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே திருமணமான அந்த பெண் இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற பொழுது சில ரவுடிகளோடு வந்த முதல் கணவர் பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது. அவரது சகோதரியையும் கத்தி குத்து காயம் அடைந்தனர். மூவரும் மருத்துவமனையில் சிகிச்சையை அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து கிராமத்தில் பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.





