--- --:--:-- --

தேவைப்பட்டால் நிச்சயமாக ஆளுநரை சந்திப்பேன் என ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி..!

4

தேவை ஏற்பட்டால் நிச்சயமாக ஆளுநரை சந்திப்பேன் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் அணியில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.பன்னீர் செல்வம் பொதுக்குழு கூட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அது நடைபெறும் தேதி விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

 

எடப்பாடி பழனிசாமி தெரப்பில் ஆளுநரை சந்தித்தது குறித்து கேள்விக்கு பதில் அளித்த ஓ பன்னீர்செல்வன் தேவை இருக்கும் எனில் நிச்சயமாக ஆளுநரை சந்திப்பேன் என தெரிவித்தார்.

 

 

Right Menu Icon