--- --:--:-- --

பட்டியலின மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 6 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு..!

4

கோவையில் அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தவர், ஐந்து ஆசிரியர்கள் உட்பட ஆறு பேர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அரசு மேல்நிலைப்பள்ளி பயின்று வந்த பட்டியலின மாணவிக்கு அந்த பள்ளியின் 40 வயதான உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒரு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

 

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்ற வழக்கில் ஆறு ஆசிரியர்கள் மீது கூடுதலாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

 

அனைத்து மகளிர் காவல்துறையினர் தாக்கல் செய்த குற்ற பத்திரிக்கையில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளியின் அப்போதைய தலைமையாசிரியர் மாணவி மிரட்டியதாக ஆங்கில ஆசிரியர், அறிவியல் ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் மற்றொரு பெண் ஆசிரியை உள்ளிட்ட ஆறு பேர் மீதும் மிரட்டல் வன்கொடுமை தடுப்பு சட்டம், போக்சோ ஆகிய ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

 

Right Menu Icon