சென்னையில் பாதாள சாக்கடை குழாயில் விழுந்த சிறுவன்..!
சென்னையில் பாதாள சாக்கடையில் 12 வயது சிறுவன் விழுந்து படுகாயம் அடைந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைந்தகரையில் உள்ள வெள்ளாளர் தெருவில் உள்ள பாதாள சாக்கடையின் மூடி திறந்து கிடந்துள்ளது.
அப்போது அந்த வழியாக தனது நண்பர்களுடன் சுவாரஸ்யமாக பேசிக் கொண்ட வந்த 12 வயது சிறுவன், எதிர்பாராத விதமாக பாதாள சாக்கடையில் விழுந்தார்.சிறுவன் சாக்கடையினுள் விழுந்ததை கண்டு அதிர்ந்து போன சக நண்பர்கள் கத்தி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் சாக்கடையினுள் விழுந்த சிறுவனை உயிருடன் மீட்டனர்.
இதில் சிறுவனின் கை மற்றும் இடது கால் பகுதியில் காயம் ஏற்பட்டது.தூய்மை பணியின் போது போதிய எச்சரிக்கை பலகை வைக்காமல் ஊழியர்கள் பணியாற்றதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.





