40 வயது செஸ் கிராண்ட் மாஸ்டரை வீழ்த்திய சென்னை மாணவன்
சர்வதேச அளவிலான செஸ் போட்டியில் ஜார்ஜியாவின் கிராண்ட்மாஸ்டர் நிகிலை வீழ்த்திய சென்னையை சேர்ந்த பள்ளி மாணவர் ஹர்ஷ்வர்தன் அனைவரையும் வியக்க வைத்துள்ளார். பன்னிரண்டாவது சென்னை ஓபன் கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இது நான்காவது சுற்றுப் பகுதியில் சென்னை வேலம்மாள் பள்ளியை சேர்ந்த மாணவன் ஹர்ஷவர்தன் ஜார்ஜியாவில் 40 வயது கிராண்ட் மாஸ்டர் நிகிலை எதிர்கொண்டார். 33 நபர்கள் செய்யப்பட்ட இப்போட்டியில் ஹர்ஷ்வர்தன் வெற்றிபெற்று கிராண்ட் மாஸ்டர் நிகிலுக்கு அதிர்ச்சியை பரிசளித்தார்.
இந்த வெற்றியின் மூலம் நான்கு புள்ளிகளுடன் பிஷாப், ஜோஸ் உள்ளிட்ட கிராண்ட் மாஸ்டர்கள் உள்ள பட்டியலில் ஹர்ஷ்வர்தன் முன்னிலையில் உள்ளார்.






