--- --:--:-- --

டூ வீலர் மீது பயங்கரமாக மோதிய கார்..!

9

பூமியில் இருசக்கர வாகனத்தின் மீது அமர்ந்து இருந்த இளைஞர் மீது வேகமாக வந்த கார் மோதி விபத்துக்கு உள்ளாகும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் ஆலந்துறை பகுதியை சேர்ந்த சபரிநாதன் என்பவர் பிளிப்கார்ட் நிறுவனத்தின் டெலிவரி பாயாக வேலை செய்து வந்தார்.

 

டெலிவரி செய்ய சபரிநாதன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது கோவையிலிருந்து சிறுவாணி நோக்கி அதிவேகமாக சென்ற கார் சாலையோரம் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டிருந்த சபரிநாதன் மீது மோதியது.

 

இதில் சபரிநாதன் தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. விபத்தில் காயமடைந்த சபரிநாதன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Right Menu Icon