மழை பாதிப்பு – முதல்வர் இன்று ஆலோசனை..!
தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று அதிகாரிகளோடு ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்று முதல் 20ஆம் தேதி வரை தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார்.






