அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய பஸ்..!
சேலம் மாவட்டத்தில் தனியார் பேருந்து ஒன்று அடுத்தடுத்து இரண்டு வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 45 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து கார் மற்றும் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.





