முதல்வர் ஸ்டாலின் குறித்து டுவிட்டரில் அவதூறாக கருத்து பதிவிட்ட முதியவர் கைது.!
சிவகாசியில் தமிழக முதலமைச்சர் குறித்து டுவிட்டரில் அவதூறு கருத்து பதிவிட்ட முதியவர் கைது செய்யப்பட்டார். முனியசாமி நகரை சேர்ந்த நாகராஜ் என்ற முதியவர் ஒரு தனியார் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஓய்வு எடுத்து வருவது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவதூறு பரப்பி உள்ளார். இந்த பதிவை அடுத்து திமுகவினர் போலீசாரிடம் புகார் அளித்ததையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.



