மகன் கைது செய்யப்பட்டதால் மன உளைச்சல்..!
மகன் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டதை அறிந்து தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காரைக்காலில் அரங்கேறியுள்ளது. காரைக்காலை சேர்ந்தவர் முருகையன் வசந்தி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
தந்தையின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட காவல்துறையினர் தங்களது மகன் கார்த்திகேயனை குற்ற வழக்கு ஒன்றில் கைது செய்திருப்பதாகவும், மறுநாள் காலை காவல் நிலையம் வருமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






