--- --:--:-- --

நூடுல்ஸ் சாப்பிட்ட 2 வயது குழந்தை உயிரிழப்பு..!

7

திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்ட 2 வயது குழந்தை உணவு ஒவ்வாமையால் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரைக்குடியை சேர்ந்த தாய் தனது குழந்தைக்கு சில நாட்களுக்கு முன் உடலில் அலர்ஜி ஏற்பட்டதால் பெற்றோர்கள் மருத்துவரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.

 

வெள்ளிக்கிழமை இரவு அவருக்கு தாயின் நூடுல்ஸை சமைத்து கொடுத்து விட்டு மீதமுள்ளவற்றை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் அதனை சாப்பிட கொடுத்ததாக கூறப்படுகிறது. மாலை வரை சோர்வாக இருந்த அவர் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.

 

உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஏற்கனவே உடல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் துரித உணவான நூடுல்ஸ் உட்கொண்டதால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

 

உணவு சமைத்த 2 மணி நேரத்திற்குள்ளாகவே காற்றுப்புகாத பெட்டியில் அடைத்து அதை பிரிட்ஜில் வைக்க வேண்டும் என்றும், மீண்டும் அதனை சாப்பிடும் முன் சூடுபடுத்திய பரிமாற வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Right Menu Icon