--- --:--:-- --

பல் வலிக்கு சிகிச்சைக்கு சென்ற நடிகை..! முகம் வீங்கியதால் பரபரப்பு..!

8

பெங்களூருவில் பல்வலிக்கு சிகிச்சை பெற்ற நடிகையின் முக அமைப்பு மாறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு ஜேபி நகரில் வசித்து வருபவர் சுவாதி. இவர் கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

 

கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஸ்வாதிக்கு பல் வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக எண்ணூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மருந்துக்குப் பதிலாக ஒரு ஊசியை கொடுத்து அதை செலுத்தி கொள்ளும்படி கூறியதாக தெரிகிறது.

 

அதன் பேரில் அந்த ஊசியை சுவாதி செலுத்தியுள்ளார். இதன் பின்னர் ஸ்வாதியின் முகம் நன்றாக வீங்கி முகத்தின் அமைப்பு மாறியுள்ளது. இதனால் அவர் கடந்த 20 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

 

மேலும் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் உடன் தொடர்பு கொண்டு கேட்டபோது முகவீக்கம் விரைவில் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார். ஆனால் தற்போதுவரை சுவாதிக்கு முகவீக்கம் சரியாகவில்லை. இதனால் மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்டாலும் யாரும் சரியாக பதில் சொல்வது இல்லை என்றும் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

 

Right Menu Icon