500 ரூபாய் கேட்டால் 2500 ரூபாய் கொடுக்கும் ATM..!
மகாராஷ்டிராவில் ஏடிஎம் ஒன்றில் 500 ரூபாய்க்கு பதிலாக 2500 ரூபாய்வந்ததை அறிந்து பணம் எடுப்பதற்காக ஏடிஎம்மில் மக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது. நாக்பூர் அருகே உள்ள ஒரு தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் ஒரு நபர் ஒருவர் 500 ரூபாய் எடுக்க முற்பட்ட பொழுது அவருக்கு 5, 500 ரூரூபாய் நோட்டுகள் வந்தன.
இதையடுத்து அவர் மீண்டும் அதே போல 500 ரூபாய் எடுக்க முற்பட்டபோது அவருக்கு மேலும் ஐந்து 500 ரூபாய் நோட்டுகள் வந்தன. இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் சிறிது நேரத்தில் ஏடிஎம்மில் பணம் எடுக்க ஏராளமானோர் குவிந்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் ஏடிஎம்மில் சென்று நேரில் விசாரணை நடத்தியதில் 200 ரூபாய் வைக்கவேண்டிய தட்டில் ஐநூறு ரூபாய் தவறாக வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





