சாலை நடுவே அறுந்து விழுந்த மின் கம்பி..!
குமாரபாளையத்தில் அடித்த சூறைக்காற்றால் மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தடைபட்டது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததில் மின் கம்பி ஒன்று அறுந்து சாலையின் நடுவே வந்துள்ளது.
இந்த நிலையில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் சாலை நடுவே கிடந்த மின்கம்பியை பார்த்து அச்சமடைந்து நிலை தடுமாறி விழுந்ததில் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த அந்த பகுதிக்கு வந்த மின்துறை ஊழியர்கள் மின்சார விநியோகத்தை நிறுத்தி விட்டு இரண்டு மணி நேர முயற்சிக்கு பிறகு மின் இணைப்புகளை சரி செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





