ஓடும் ரயிலில் இருந்து பெண் போலீசை தள்ளிவிட்டு தப்பிய திருடன்..!
பிஹார் மாநிலம் கத்திகார் பகுதியில் ஓடும் ரயிலில் பெண் போலீஸ் காவலரிடம் செல்போனை பறிக்க முயற்சி செய்த ஒருவன் செல்போனை தராமல் போராடிய அவரை ரயிலில் இருந்து தள்ளி விட்டு தப்பி சென்றார். ரயிலில் கூட்டம் குறைவாக இருந்ததால் அவன் எளிதாக தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
காயம் அடைந்த அந்த பெண் காவலர் 20 நிமிடங்களுக்கு பிறகு மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





