ஜூன் 20-ல் 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு..!
ஜூன் 20ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்ற நிலையில் முடிவுகள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரால் வரும் 20ஆம் தேதி அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் வெளியிடப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
அதன்படி ஜூன் 20-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும், நண்பகல் 12 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளங்களில் மாணவர்கள் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 20-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




