கல்லூரி திறந்தவுடன் மாணவியருக்கு ரூ.1,000 வழங்கப்படும்..!
மாணவியருக்கு உயர்கல்வி உதவித்தொகை 1000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுடன் முதியவர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இதில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது எனவும் முதியோர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் முதியோர்களுக்கான தனிக் கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது விரைவில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டார்.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார் எனவும் மாணவியருக்கு உயர் கல்வி உதவி தொகை 1,000 ரூபாய் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது எனவும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறக்கப்பட்டவுடன் தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.





