--- --:--:-- --

காவலர் பயிற்சியின் போது பெண் காவலருக்கு பாய்ந்த கத்தி..!

6

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே காவலர் பள்ளியில் பயிற்சியின் பொழுது பெண் காவலருக்கு கத்தி குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாநகரில் பெண் காவலர் பயிற்சி பள்ளி உள்ளது. இதில் 450 பெண் புதிய காவலர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

 

இதில் உசிலம்பட்டி அருகே உள்ள முத்துப்பாண்டிபட்டியை சேர்ந்த தங்கம் என்பவர் பயிற்சி பெற்று வருகிறார். புதன்கிழமை காலை பயிற்சியின்போது துப்பாக்கியை தோளில் சுமந்துகொண்டு தடை தாண்டுதலில் ஈடுபட்டுள்ளார்.

 

அப்பொழுது தடுமாறி கீழே விழுந்த பொழுது துப்பாக்கியின் முன்பகுதியில் உள்ள கத்தி தங்கத்தின் கால் பகுதியில் குத்தியது. அவரின் அலறல் சத்தம் கேட்ட சக காவலர்கள் ஓடி வந்து அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உடனடியாக அறுவை சிகிச்சை செய்தவர்கள் காலில் குத்தி இருந்த கட்டியை அகற்றினர்.

 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon