பேருந்தில் ஹெட்போன் இல்லாமல் செல்போன் பேச தடை..!
பேருந்தில் ஹெட்போன் இல்லாமல் செல் போன் பேசவும் பாடல்களை கேட்கவும் வீடியோ கேம் விளையாடவும் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. பேருந்துகளில் பயணம் செய்யும் பொழுது மற்ற பயணிகள் கோபம், எரிச்சல் போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தும் வகையில் செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இது குறித்து பயணிகள் நடத்துனரிடம் முறையிடும் பொழுது சில பயணிகள் தகராறில் ஈடுபடுகிறார்கள். இதை கட்டுப்படுத்த நடத்துனருக்கு சட்டப்படி உரிமை இல்லாததால் ஒரு எல்லைக்கு மேல் எதுவும் செய்ய முடிவதில்லை.
எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பயணிகளிடம் இருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் பேருந்துகளில் ஹெட்போன் இல்லாமல் செல் போன் பேசவும், கேட்கவும், வீடியோ கேம் விளையாடும் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. அதனை பயணிகள் பேருந்தில் இருந்து இறக்கிவிடவும் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு சட்ட உரிமை வழங்கப்பட்டுள்ளது.





