--- --:--:-- --

முதல்வர் பாதுகாப்பு வாகனத்தை முந்த முயன்றவர் கைது..!

2

முதல்வர் முக ஸ்டாலின் பாதுகாப்பு வாகனத்தை இரு சக்கர வாகனத்தில் முந்தி செல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதல்வர் பாதுகாப்பு வாகனங்கள் சென்று கொண்டிருந்த பொழுது அதன் குறுக்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

 

தலைமை செயலகத்திலிருந்து அவருடைய வீட்டிற்கு முதல்வர் பாதுகாப்பு வாகனம் சென்றுகொண்டிருந்தது. அப்பொழுது நேப்பியர் பாலத்தை கடந்து சென்ற பொழுது இரு சக்கர வாகனத்தில் எதிர் திசையிலிருந்து இளைஞர் உள்ளே வந்துள்ளார்.

 

உடனடியாக பாதுகாப்புக்கு வந்த போலீசார் வாலிபரை மடக்கி பிடித்தனர். அதுமட்டுமல்லாது அவர் வந்த இருசக்கர வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லை என்பதும், அந்த இளைஞன் பெயர் அஜித்குமார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சென்னை ஆழ்வார் பேட்டையில் முதல்வர் பாதுகாப்பு வாகனத்தை கடக்க முயன்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Right Menu Icon