--- --:--:-- --

ஆயுள் விருத்தி வேண்டி இளையராஜா வழிபாடு..!

8

யிலாடுதுறை சென்ற இசைஞானி இளையராஜா தனது ஆயுள் விருத்தி வேண்டி நடைபெற்ற சதாபிஷேக விழாவில் பங்கேற்றார். மதுரை மாவட்டத்தில் தேவாரப் பாடல் பெற்ற அபிராமி அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

 

இந்த கோயிலில் 60 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் ஆயுள் விருத்திக்காக சாமி தரிசனம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தனது எண்பதாவது வயதை முன்னிட்டு சதாபிஷேகம் செய்து கொள்வதற்காக வருகை தந்தார்.

 

அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்தள வாத்தியங்கள் முழங்க கோயிலுக்குள் அழைத்து செல்லப்பட்டனர். இசைஞானி இளையராஜாவிற்கு 80 வயது தொடங்கியதை முன்னிட்டு ஆயுள் விருத்தி வேண்டி வழிபாடு நடத்தப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon