--- --:--:-- --

எம்.பி. பதவி கிடைக்காததால் நக்மா ஏமாற்றம்..!

6

கட்சி மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம் பெறாததால் காங்கிரஸ் பிரமுகரும் நடிகையுமான நக்மா அதிருப்தி அடைந்திருப்பதாக தற்பொழுது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

 

காங்கிரஸ் கட்சியின் சார்பில் 18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியிலிருந்து வாய்ப்பு வழங்கப்படாதது ஏன் என அவர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். மகாராஷ்டிராவில் இருந்து தற்பொழுது வாய்ப்பளிக்கப்பட்டுள்ள இம்ரான்கானை விட எனக்கு எந்த விதத்தில் தகுதி இல்லை எனவும் நக்மா கேட்டுள்ளார்.

 

எம்பி பதவி கிடைக்காத ஆத்திரத்தில் ட்விட்டரில் பகிரங்கமாக அவர் கருத்து வெளியிட்டுள்ளார். 2004 ஆம் ஆண்டு காங்கிரசில் சேரும்போது தனக்கு மாநிலங்களவை எம்பி பதவி கொடுக்கப்படும் என சோனியா காந்தி உறுதி அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon