தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடக்கம்..!
தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் 10ஆம் தேதி தொடங்குவது வழக்கம்.
ஆனால் பருவ மழையைக் குறிக்கும் அறிகுறிகள் தென்படாததால் கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஆகக்கூடும் என கூறப்பட்ட நிலையில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் நேற்று தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





