பணி தேடி சென்னை வந்த முதல் நாளிலேயே வடமாநிலத்தவர் உயிரிழப்பு..!
வேலை தேடி சென்னைக்கு வந்த முதல் நாளிலேயே வடமாநில தொழிலாளர் ஒருவர் பத்தாவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சிலர் தங்கி பணி புரிகின்றனர். இங்கு வசித்து வரும் சைபர் ஷேக் என்பவரின் நண்பர் குலாம் ரசூல் என்பவர் வேலை தேடி சென்னைக்கு வந்துள்ளார்.
மின்வாரிய அலுவலக கட்டிட பணியில் சேர்ந்தவர் எதிர்பாராதவிதமாக பத்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தார். காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





