தனக்குத்தானே பிரசவம் பார்த்து பெற்ற குழந்தையை புதரில் வீசிய தாய்..!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே யாருடைய உதவியும் இன்றி குழந்தையை இன்று புதரில் வீசிச்சென்ற பெண்ணும், அந்த குழந்தையும் மீட்கப்பட்டனர். ஆண்டவர் கோயில் ஆற்றின் அருகே புதர் ஒன்றில் இறந்து பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை மீட்ட வழிப்போக்கர்கள் அத்தனை மருத்துவமனையில் சேர்த்தனர்.
குழந்தையின் தாய் அங்குள்ள கோயில் வளாகத்தில் மயங்கி கிடந்துள்ளார். விசாரணையில் இனாம் ரெட்டியபட்டியை சேர்ந்த அந்த பெண்ணின் கணவர் இறந்து விட்ட நிலையில் முறையற்ற உறவில் குழந்தை இறந்ததாக கூறப்படுகிறது.
செய்வதறியாது வீட்டை விட்டு வெளியேறி தனக்கு தானே பிரசவம் பார்த்துக் கொண்ட அந்த பெண் கோவில் வளாகத்தில் சென்று படுத்து இருந்தது தெரியவந்தது.





