பெண்களுக்கு பேய் பிடித்திருப்பதாகக் கூறி சாட்டையால் அடித்த பூசாரி..!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு சாட்டையடி கொடுத்து ஆசி வழங்கும் வினோத திருவிழா நடைபெற்றது. மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.
முக்கியமாக காட்டேரி வேடமணிந்த பூசாரி குறிப்பிட்ட பெண்களுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி முறம் மற்றும் சாட்டையால் அடித்து ஆசி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.





