மாணவனை அறைந்தாரா துணை சபாநாயகர்..!
ஹிமாச்சல பிரதேசம் சம்பா மாவட்டத்தில் ரயிலாவில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பார்வையிட சென்றுள்ளார். அந்த மாநில சட்டசபை துணை சபாநாயகர், பாஜக எம்எல்ஏவுமான ஹன்ஸ்ராஜ் பள்ளியில் வகுப்பறைகளுக்கு சென்று மாணவர்களிடம் உரையாடினார்.
அதுபோன்று மற்றொரு வகுப்பறைக்கு சென்ற அவர் அங்குள்ள மாணவர்களிடம் உரையாடினார். அங்கிருந்த மாணவர் ஒருவரிடம் உங்களுக்கு உடல்நிலை சரியில்லையா என்று கேட்கிறார். இதனால் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு மாணவன் சிரித்ததாக சொல்லப்படுகிறது.
ஏன் சிரிக்கிறாய் என கேட்டபடி அருகில் சென்று அந்த மாணவரை அறைந்ததாக ஒரு வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து வகுப்பில் மாணவனை அடித்ததை அவரின் தந்தை மறுத்துள்ளார்.
அடித்ததாக கூறப்படும் மாணவியின் குடும்பத்தினர் இதுவரை புகார் அளிக்கவில்லை. இதுகுறித்து சிறுவனின் தந்தை ரியாஸ் முகமது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஹன்ஸ்ராஜ் தனது மகனை அடிக்கவில்லை ஆனால் அன்புடனும் பாசத்துடனும் தொட்டார் அவருக்கு நான் நன்றி கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.






