விஷவாயு தாக்கி இருவர் கவலைக்கிடம்..!
திருப்பூர் மாவட்டம் பாச்சாங்காட்டு பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
சுரேஷ் என்பவரின் வீட்டின் வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக செப்டிக் டேங்க் லாரி உரிமையாளரான தண்டபாணி தொழிலாளர்களுடன் வந்துள்ளார். சுத்தம் செய்வதற்காக இறங்கிய பொழுது விஷவாயு தாக்கி உள்ளது. இதில் இருவரும் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





