--- --:--:-- --

லைவ் வீடியோவில் மனைவிக்கு முத்தம் கொடுத்த சினேகன்..!

14

விஞர் சினேகன் தமிழ் சினிமாவில் எத்தனையோ ஹிட் பாடல்களை கொடுத்தவர். இவர் முதல் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்ட பிறகு தான் இந்த அருமையான பாடல்களை எழுதியது இவரா என ரசிகர்கள் ஆச்சரியப்பட ஆரம்பித்தார்கள்.

 

பிக்பாஸ் பிறகு சினேகன் அரசியலில் ஈடுபட்டு பிஸியாக இருந்தார். அதன்பிறகு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், ஆனால் இடையிலேயே வெளியேறினார்.

 

இடையில் இவருக்கு நடிகை கன்னிகாவிற்கும் திருமணம் நடந்தது.நடிகை கன்னிகா நன்றாக கம்பு சுற்றுவார் என்பது நாம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். ஆனால் அவர் நல்ல ஓவியம் வரையக் கூடியவர் என்பது சமீபத்தில் அவர் வெளியிட்ட லைவ் வீடியோவில் தெரிந்தது.

 

சினேகனிடம் தான் வரைந்த ஓவியத்தை கன்னிகா காட்ட, அவரோ தனது ஆசை மனைவிக்கு முத்தம் கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். உடனே கன்னிகா கோபப்பட்டு முத்தம் எல்லாம் லைவ் வீடியோவில் கொடுக்காதீர்கள், நான் வீடியோ விட மாட்டேன். கமெண்ட்ஸில் வந்து தப்பு தப்பாக பேசுவார்கள் என கூறி கட் செய்துள்ளார்.

Right Menu Icon